5/20/20

15 Best Selected Motivational Quotes In Tamil By Swami Vivekananda

Motivational Quotes In Tamil

My dear friends! In this post, you can read the top best selected Motivational Quotes In Tamil. These all Tamil Quotes said Swami Vivekananda. Swami Vivekananda Motivational Quotes In Tamil are very famous. very popular Motivational Quotes In Tamil are available in this post so please read The best choice of yours. and share with your friends and relatives this Motivational Quotes In Tamil


நல்லவர்கள் உலகில் பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது. இந்த உண்மையை உலக வரலாறு எங்கும் காணமுடியும். 
 --சுவாமி விவேகானந்த


motivational-quotes-in-tamil
motivational-quotes-in-tamil



யாருடைய நம்பிக்கையையும் கலைக்க முயலாதீர்கள். முடியுமானால் அந்த மனிதனுக்கு அவன் கொண்ட நம்பிக்கைக்கும் மேலாக இன்னொன்றைக் கொடுங்கள் 
 --சுவாமி விவேகானந்த



எழுந்து தைரியமாக நின்றால் உன் விதியை நீயே நிர்ணயிப்பாய். 
 --சுவாமி விவேகானந்த



நம்மைப் பற்றிச் சிந்திக்காமல் மற்றவர்களுடைய நன்மையைக் குறித்துச் சிறிதளவு நினைத்தால் கூடப் போதுமானது. இந்தச் சிந்தனை சிங்கத்திற்குச் சமமான ஆற்றலை நமது இதயத்திற்குப் படிப்படியாகத் தரும் 
 --சுவாமி விவேகானந்த



மனிதன் தன் வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத் தவிர வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல. 
 --சுவாமி விவேகானந்த


கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பர் அன்பைக் கொள்ளாமல் பொருளை மட்டும் கொள்ளும் விலைமகள் போன்றவர் ஆவார். அவருடைய நட்பினை ஏற்றுக் கொள்ளாதீர்கள். 
 --சுவாமி விவேகானந்த




உங்களிடமே நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். ஒருகாலத்தில் நீங்கள் வேதகாலத்தைச் சேர்ந்த ரிஷிகளாக இருந்தீர்கள். இப்போது நீங்கள் வேறுவித வடிவம் தாங்கி வந்திருக்கிறீர்கள். 
 --சுவாமி விவேகானந்த



அறிவு உள்ளம் ஆகிய இரண்டில் எதைப் பின்பற்றுவது என்ற போராட்டம் எழும் போது உள்ளம் சொல்வதையே நீங்கள் பின்பற்றுங்கள். அறிவால் அடையமுடியாத உயர்ந்த இடத்திற்கு நல்லமனநிலை ஒருவனை அழைத்துச் செல்லும். 
 --சுவாமி விவேகானந்த




மற்றவர்களுக்காக நீங்கள் மேற்கொள்ளும் மிகக் குறைந்த அளவு உழைப்பும் நமக்குள்ளே இருக்கும் சக்தியைத் தட்டி எழுப்புகிறது. 
 --சுவாமி விவேகானந்த



ஒரு எஜமானைப் போல உங்கள் செயல்களைச் செய்யுங்கள். அடிமையைப் போல உங்கள் செயல்பாடுகள் அமையக்கூடாது. 
 --சுவாமி விவேகானந்த




கர்மயோகம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஒருவருக்கு அவர் யார் எப்படிப்பட்டவர் என்ற சிந்தனையோ கேள்வியோ இல்லாமல் கூட அவருக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது தான். 
 --சுவாமி விவேகானந்த





Post a Comment